Madurai Guide
Quick Search :
Main Menu
சிவாஜி கணேசனின் சிலை மதுரையில்
Posted By Anand

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை மதுரையில் திறக்கப்பட்டது. மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகே எட்டர‌ை அடி உயரத்தில் சிவாஜிகணேசன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்து பேசினார். விழாவில் பங்கேற்ற பலரும் சிவாஜி கணேசனைப் பற்றிய மலரும் நினைவுகளை வெளிப்படுத்தினார்கள்.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "சிவாஜி முழுமையாக வாழ்ந்து காட்டினார். எளிமையை கற்றுக்கொடுத்தார். அவர் எங்களுக்கு ஒரு கேடயம். அதை வைத்துத்தான் போராடுகிறோம்,'' என்றார். நடிகர் பிரபு பேசும்போது, "நானும், ராம்குமாரும் சிவாஜிக்கு மகனாக இருக்கிறோம். ஆனால், அவரது திரையுலக வாரிசு கமல்ஹாசன்தான்,'' என்றார். இயக்குனர் சசிக்குமார், பேசுகையில் "மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகாலுக்கு அடுத்தபடியாக மற்றொரு அடையாளம் சிவாஜி சிலை,'' என்றார். நடிகர் வடிவேலு "தேவர் மகன் படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவங்களை தனக்கே உரிய பாணியில் காமெடியாக பேசி கலகலப்பூட்டினார். மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், "சிவாஜியுடன் சேர்ந்து ஒரு படத்தில்கூ‌ட நடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது,''என்ற தனது ‌வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

விழாவில் நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய், தியாகு, இயக்குனர்கள் பி.வாசு, சசிக்குமார், சிவாஜி மன்ற தலைவர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Photos
Listing    1 - 2 of 2  
People uploaded photos
No photos uploaded yet. You can upload a photo here.
Login to Upload your own photo for "சிவாஜி கணேசனின் சிலை மதுரையில்"
What people think about  "சிவாஜி கணேசனின் சிலை மதுரையில்" ?
No public opinions yet.
Login to say your opinion about "சிவாஜி கணேசனின் சிலை மதுரையில்"