Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
என் அப்பா சினிமாவில் இருந்திருந்தால்...! -ஷாம்

சினிமா உலகில் எந்த வித பின்பலமும் இல்லாமல் வளர்ந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் ஒரு நாயகனாக உருவாவது ரொம்பவே கஷ்டமான வேலை. விஜய், சிம்பு போன்றவர்களுக்கு திரையுலகில் அவர்களது அப்பா பின்பலமாக இருந்தார்கள். இது அவர்களது வளர்ச்சிக்கு உதவியது. ஆனால் அஜித் உள்ளிட்ட சிலர் திரையுலகிற்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்றவர்கள். அந்த வரிசையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து லேசா லேசா, இயற்கை, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, தூண்டில் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஷாம். தற்போது அவர் நடித்து வரும் அகம் புறம் படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருப்பதன் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதுபற்றி ஷாம் கூறுகையில், அகம் புறம் படத்தை முதலில் ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்க ஒப்புக்கொண்டது. பாதிப்படம் வளர்ந்த நிலையில் பட்ஜெட் தாங்காது என்று அவர்கள் விலகிக் கொண்டனர். சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க வேண்டி இருந்தது. அதற்கு பட்ஜெட் இடம் தரவில்லை என்று கூறிவிட்டனர். எனவே இந்தப் படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன். இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் கூட இப்படி பாதியில் தடுமாறியுள்ளன. ஆனால் அவற்றை நான் தயாரிக்கவோ, பணம் கொடுத்து உதவவோ முன்வந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் இந்த படத்தின் டீம் என்னோடு பழகிய விதம் போன்றவைதான் இந்தப் படத்தை நான் த‌யாரிக்கக் காரணமாக அமைந்தன, என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு அண்ணனோ, அப்பாவோ சினிமாவில் பின்பலமாக இல்லை. இருந்திருந்தால் பெரிய அளவு வந்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லையே என்று நினைத்து நான் வருத்தப்படவில்லை. தெலுங்கில் நிறையப் பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தெலுங்கானா பிரச்சினை காரணமாக அவற்றில் நடிப்பதை தள்ளிப் போட்டுள்ளேன். நான் தெலுங்கில் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற கிக் படம் தமிழில் தில்லாலங்கடி என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்திலும் தெலுங்கில் நான் செய்த அதே ரோலை செய்கிறேன். இந்தப் படத்துக்காக ஜெயம் ரவி, ராஜா, எடிட்டர் மோகன் ஆகியோருடன் ஒரு குடும்பமாக பணியாற்றியது மிகுந்த நிறைவைத் தந்தது, என்றார்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "என் அப்பா சினிமாவில் இருந்திருந்தால்...! -ஷாம்" ?
No public opinions yet.
Login to say your opinion about "என் அப்பா சினிமாவில் இருந்திருந்தால்...! -ஷாம்"