Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
கிரிக்கெட்டை விட சினிமா கஷ்டம் : சொல்கிறார் சடகோபன்

கிரிக்கெ‌ட் விளையாடுவதை விட சினிமாவில் நடிப்பது கஷ்டமான வேலை என்று பட்டாபட்டி 50 - 50 படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் சடகோபன் ரமேஷ் தெரிவித்தார். பட்டாபட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சடகோபன் ரமேஷ், கிரிக்கெட் விளையாடுவதை விட, சினிமாவில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என்றார். அவர் பேசும்போது, பட்டாபட்டி படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது. அதனால் நான் இதில் நடிக்கிறேன். முன்பெல்லாம் சில ஹீரோக்களை பார்த்து எவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என நினைத்திருக்கிறேன். நடிக்க வந்த பிறகுதான், நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்பது புரிகிறது, என்றார்.

நிகழ்ச்சியில் கலைப்புலி ஜி.சேகரன், பன்னீர்செல்வம், வெங்கட் ரமணி, எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, விஜய் ஆண்டனி, நடிகர் ஜெய் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பட்டாபட்டி படத்தில் நாயகன் சடகோபன் ரமேஷுக்கு ஜோடியாக ஹரிணி நடிக்கிறார். யுவராஜ் இயக்குகிறார். ஒளிப்பதிவு கோபி அமர், இசை அருள்தேவ். ஏவிஆர் டாக்கீஸ் மற்றும் பிலிக்கர் ஸ்டூடியோஸ் சார்பில் வி.முரளிராமன், யுவ்ராஜ், ஏ.எல்.அருன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "கிரிக்கெட்டை விட சினிமா கஷ்டம் : சொல்கிறார் சடகோபன்" ?
No public opinions yet.
Login to say your opinion about "கிரிக்கெட்டை விட சினிமா கஷ்டம் : சொல்கிறார் சடகோபன்"