|
 |
 |
|
|
| முதல்வருடன் அஜித் சந்திப்பு! பேசியது என்ன? |
பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித், மேடையில் பேசும்போது, இதுபோன்ற விழாக்களுக்கு வரும்படி நடிகர்களை வற்புறுத்துகிறார்கள். மிரட்டுகிறார்கள். அதனை நீங்கள்தான் தடுக்க வேண்டும் ஐயா, என்று கோரிக்கை வைத்தார். இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அஜித்தின் கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் அஜித்தை கண்டித்ததால், அஜித் அடியாட்களை ஏவி விட்டு தன் கார் மற்றும் வீட்டை அடித்து நொறுக்கியதாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் புகார் செய்துள்ளார்.
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியை நடிகர் அஜித் நேற்று மாலை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பினைத் தொடர்ந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவ்வளவுதான். இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் நான் பேசியதை பாராட்டியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விழாவில் பேசியது அத்தனையும் எனது சொந்த கருத்துக்கள்தான். யாரும் என்னை பேசச் சொல்லி தூண்டி விடவில்லை, என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், நீங்கள் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு அஜித், நோ கமெண்ட்ஸ்! என்று மட்டும் கூறினார். முதல்வரிடம் என்ன பேசினீர்கள்? என்று கேட்டதற்கு, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.
இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 10 மணி செய்திகளில் முதல்வர் கருணாநிதியும், நடிகர் அஜித்குமாரும் பேசிய பேச்சு தொடர்பான செயதியில், முதல்வரிடம் அஜித் பரிதாபத்தடன் மன்னிப்பு கேட்ட காட்சிகள் இடம்பெற்றன.
முதல்வருடன் அஜித் சந்திப்பு, அஜித் மீது போலீசில் புகார் ஆகிய சம்பவங்கள் அரசியல் வட்டாரத்திலும், சினிமா உலகிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. |
|
|
|
|
 |
| External Links |
| Not Available |
|
 |
| What people think about "முதல்வருடன் அஜித் சந்திப்பு! பேசியது என்ன?" ? |
|
|
 |
|
|
|
|
 |
| |