Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
வில்லன் நடிகர் சஸ்பெண்ட்! நடிகர் சங்கம் அதிரடி!!

நடிகர் சங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கங்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ஒருவரை அதிரடி சஸ்பெண்ட் செய்து திரையுலகையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது மலையாள நடிகர் சங்கம்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து பல விருதுகளை பெற்றிருப்பவர் நடிகர் திலகன். இவர் ஒரு சினிமாவில் நடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து கேரளாவில் நடந்த தர்ணா போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட திலகன், சூப்பர் ஸ்டார்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரிய நடிகர்கள், பிற நடிகர்களின் வாழ்க்கையையும், திரையுலக வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில் சதித் திட்டத்துடன் செயல்படுகிறார்கள், என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் மீது நடிகர் திலகன் சில புகார்களையும் தெரிவித்தார். திலகனின் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக பிரபல மலையாள எழுத்தாளரும், பேச்சாளருமான சுகுமார் அழிக்கோடு என்பவரும் களத்தில் குதித்து மோகன்லாலையும், மம்முட்டியையும் கடுமையாக தாக்கி பேசியதால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பதிலடியாக நடிகர் மோகன்லான் அளித்த பேட்டியில், எழுத்தாளர் சுகுமாருக்கு சித்த பிரமை பிடித்து விட்டது. அதனால் உளறுகிறார், என்று கூறியிருந்தார். எழுத்தாளர் சுகுமாரோ... மோகன்லால் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக கூறினார்.

இதற்கிடையே மலையாள நடிகர்கள் சங்கம், இதுபற்றி நேரில் ஆஜராகி பதில் அளிக்குமாறு திலகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் திலகன், விளக்கம் அளிக்க முன்வரவில்லை. இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மலையாள நடிகர் சங்க தலைவர் இன்னசென்ட், செயலாளர் இடைவேளை பாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் திலகன், வேண்டுமென்றே ஆஜராகவில்லை. மார்ச் 8ம்தேதிக்குள் அவர் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். அதுவரை அவரை சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர்.

பிரபல வில்லன் நடிகர் திலகன், நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "வில்லன் நடிகர் சஸ்பெண்ட்! நடிகர் சங்கம் அதிரடி!!" ?
No public opinions yet.
Login to say your opinion about "வில்லன் நடிகர் சஸ்பெண்ட்! நடிகர் சங்கம் அதிரடி!!"