Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

நடிகர் அஜித் இனி தனது பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எவ்வளவோ மாற்றங்கள் வரும். இன்றைக்கு இருக்கிற சினிமா ரசிகர்கள் ரொம்பவே மாறியிருக்கிறார்கள். அதனால்தான் இனிமேலும் அல்டிமேட் ஸ்டார் பட்டம் போட்டுக்கணுமா?னு யோசி்ச்சேன். வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், என்று தெரிவித்தார். அவரைப் போலவே தனுஷூம் பெயருக்கு முன்னால் பட்டம் போடுவதை விரும்பவில்லை, என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பரத் இந்த பட்ட விவகாரம் குறித்த தனது கருத்தை கூறியிருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் போல நீங்களும் உங்கள் பட்டத்தை விட்டு விடுவீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி ஹீரோக்களையே உசுப்பி விடும் அளவுக்கு பதில் அளித்துள்ளார். நீங்கள் குறிப்பிடும் ஹீரோக்களுக்கு யார் அந்த பட்டங்களை கொடுத்தார்கள். ஏன் இப்போது அதை போடத் தயங்குகிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ரசிகர்கள் அன்போடு கொடுத்த சின்னத் தளபதி பட்டத்தை அடுத்தடுத்து ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்துவது நிச்சயம். நோ காம்ப்ரமைஸ், என்று கூறுகிறார் பரத்!.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!" ?
No public opinions yet.
Login to say your opinion about "பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!"