நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகமாகும் படம் பாணா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் முரளி பேசுகையில், தனது மகனுக்கு அட்வைஸ் மழை பொழிந்தார். அவர் பேசியதாவது: என் மகன் என் தொழிலுக்கு வந்திருப்பதில் ரொம்ப சந்தோஷம்.
30 வருஷமா எத்தனையோ வெற்றியாளர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் என் மகனையும் அறிமுகப்படுத்தியதில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எனக்கு திரையுலகில் தெய்வம் ராஜா சார்தான். எனக்கு வாழ்க்கை கொடுத்த ராஜா சார், எனக்கு நல்ல பாடல்களை போட்டுக் கொடுத்தார். யுவனிடம் ஒரு வேண்டுகோள் வச்சேன்.
அப்பா மாதிரி என் மகனுக்கு நீங்க நல்ல பாடல்களை கொடுக்கணும்னு சொன்னேன். அவரும் 5 பாடல்களை சிறப்பா தந்திருக்கார். அதர்வா நல்லா டான்ஸ் பண்ணியிருக்கார். எனக்கு சுத்தமா டான்ஸ் ஆடவே வராது. ஆத்தாடி பாவாடை.... பாடலில் ஆரம்பிச்சி, தஞ்சாவூரு மண்ணு எடுத்து... பாடல் வரைக்கும் ஏதோ ஒப்பேற்றி ஆடிட்டேன். நான் செய்த ஓராயிரம் தவறுகளை மன்னித்து, பத்திரிகைகள், தொலைக்காட்சி மக்கள் என்னை வளர்த்து விட்டார்கள்.
அதேபோல என் மகனுக்கும் உறுதுணையா இருக்கணும்னு கேட்டுக்கிறேன். சினிமாவில் மார்க்கெட் இருக்கோ, இல்லையோ... முதலித் தயாரிப்பாளர்கள் நம்ம முதலாளிகள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கணும். அவர்களை எப்பவும் மதிக்கணும்னு என் மகனிடம் சொல்லியிருக்கேன். எனக்கு வாழ்வு கொடுத்தவங்க நிறைபேர் சினிமாவுல இருக்காங்க. எல்லார்க்கும் செல்லப்பிள்ளையாத்தான் இருந்திருக்கேன், என்று முரளி பேசினார். |