திருப்பதியில் சிறப்பு சலுகை கேட்டு தர்ணா செய்த மனோரமா
நகைச்சுவை நடிகை மனோரமா ஏப்., 30ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் கையில் அணிந்திருந்த வளையல், மோதிரம் போன்ற சில நகைகளையும் காணிக்கை செலுத்தினார். இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் சிறுமியாக இருந்த போது இங்கு வந்து முடி காணிக்கை செலுத்துவதாக என் அம்மா வேண்டுதல் வைத்து இருந்தார்.
இதுவரை அதற்கு நேரம் வரவில்லை. இப்போதுதான் வந்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறேன். சிறிது நேரத்துக்கு முன் எவ்வளவு அழகாக இருந்த நான் இப்போது எப்படி மாறி இருக்கிறேன் பாருங்கள் என்று தெரிவித்தார். சுடிதார் அணிந்து இருந்த மனோரமா, சிறப்பு விருந்தினர்களுக்கான விடுதியில் அறை கேட்டார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட வில்லை என்று கூறி, நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்த எனக்கு விருந்தினர் விடுதியில் அறை கொடுக்காதது ஏன்? என்று கேட்டார்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "திருப்பதியில் சிறப்பு சலுகை கேட்டு தர்ணா செய்த மனோரமா" ?