Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
அசின் அம்மாவாக நடிக்கப் போகிறார் ரோஜா

தமிழில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடனேயே ஆந்திர அரசியலில் நுழைந்து கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை ரோஜா. ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ரோஜா, தமிழ் மற்றும் தெலுங்கில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

டைரக்டர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட ரோஜா, திருமணத்துக்கு பின்னர் சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், ஆந்திர அரசியலில் அதிரடியாக குதித்தார். திரைப்படத் துறையில், அழகு ரோஜாவாக பூத்துக் குலுங்கிய ரோஜா, அரசியலில் குதித்தப் பின், எதிர்க்கட்சிகளுக்கு முள்ளாகவும், வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான ரோஜாவாகவும் பழகி வருகிறார்.

தேர்தல் நேரங்களில் பிரசார களத்தில் இறங்கி ரசிகர்களுடன் கைகுலுங்கி வாக்கு சேகரித்து வெற்றிக்கு போராடிய ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா ஒன்றில் நடிக்கப் போகிறார்.

விஜய்யுடன் அசின் ஜோடி சேரும் புதிய படத்தில்தான் ரோஜா நடிக்கிறார். காவல்காரன் என்ற பரிசீலனைப் பெயருடன் உருவாகி வரும் இப்படத்தின் அசினுக்கு அம்மாவாக ரோஜா நடிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரோஜாவின் கணவராக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "அசின் அம்மாவாக நடிக்கப் போகிறார் ரோஜா" ?
No public opinions yet.
Login to say your opinion about "அசின் அம்மாவாக நடிக்கப் போகிறார் ரோஜா"