Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!!

இங்கிலாந்தில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித்துக்கு 18வது இடம் கிடைத்துள்ளது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த திரையுலக விழாவில் பங்கேற்று பேசி, சர்ச்சையில் சிக்கிய அஜித், அந்த பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்ததும், தனது 50வது பட வேலைகளை கவனிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ... 50வது பட வேலைகளை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு, கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடந்த பார்முலா 2 பந்தயத்தில் பங்கேற்ற அஜித், முதல் கட்டப் போட்டிகளில் கடைசி இடத்திலேயே இருந்தார். மொத்தம் 23 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அஜீத் 22 அல்லது 23 வது இடத்திலேயே மாறி மாறி வந்து கொண்டிருந்தார். இதற்கு முதல் முதலாக பார்முலா 2 ரேஸில் பங்கேற்றதால் சிறிய தடுமாற்றம் என காரணம் கூறப்பட்டது. மற்ற வீரர்கள் எல்லாம் பல களங்களை கண்டவர்கள் என்பதால் முன்னேறுவதில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் ‌‌போட்டிகளை சவாலுடன் எதிர்கொண்ட அஜித் நேற்றைய போட்டியில் முன்னேறி 18வது இடத்தை பிடித்துள்ளார். தனது முதல் போட்டியிலேயே, தொழில்முறை வீரர்களுடன் போட்டியிட்டு 18வது இடத்தைப் பிடித்துள்ள அஜீத்தை மற்ற இந்திய வீரர்களான இப்ராகிம், சுரேஷ்வரன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இந்த முன்னேற்றம் குறித்து அஜித் அளித்துள்ள பேட்டியில், " பார்முலா 2 போட்டியை பொறுத்தவரை வெற்றி முக்கியமில்லை. பங்கேற்புதான் முக்கியம். முதல்முறையாக நான் பங்கேற்று 18வது இடத்தை பிடித்துள்ளேன். முதல் போட்டியில் இதுவே பெரிய விஷயம்தானே. அடுத்த போட்டியில் இன்னும் போட்டியை ஏற்படுத்துவேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது" என்று கூறியுள்ளார். அஜித்துடன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களான இப்ராகிம் 8வது இடத்தையும், சுரேஷ் வரன் 16வது இடத்தையும் பிடித்தனர் என்பது கூடுதல் தகவல்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!!" ?
No public opinions yet.
Login to say your opinion about "கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!!"