முன்னணி காமெடி நடிகர்கள் நிலம் வாங்குவதிலும், வீடு வாங்குவதிலும் மும்முரமாக இருந்து வரும் நேரத்தில் தனது காமெடி திறனால் கலகலப்பூட்டி ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் ஒருவர் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் டைரக்டர் ஆகும் கனவுடன் சென்னைக்கு வந்த அந்த காமெடி நடிகரின் பெயர் பெஞ்சமின். வெற்றிக்கொடி கட்டு படத்தின் காமெடியனாக அறிமுகமாகி, ஆட்டோகிராப், திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பெஞ்சமின் திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்த காட்சிகளால் ரொம்பவே பிரபலமானார்.
பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய பெஞ்சமின் தற்போது புதிய படமொன்றை இயக்கப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா உலகிற்கு எப்படியும் ஒரு டைரக்டராக ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். டைரக்டர் பாலச்சந்தரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தேன். அவரிடம்தான் நான் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டேன். இப்போது திருமந்திரம் உள்பட 5 படங்களில் நடித்து வருகிறேன். ஒரு புதிய படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். அந்த படத்திற்கு இசை அமைப்பதும் நான்தான். இதில் பருத்தி வீரன் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். கோவை கல்லூரி மாணவர் மஞ்சுநாத் இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். கோனூர் ராஜேந்திரன் திரைக்கதை வசனம் எழுதுகிறார். இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, என்று கூறியுள்ளார்.
நடிகர் பெஞ்சமின் நடிப்புடன், ஆட்டோகிராப் என்ற பெயரில் ஒரு ஆஸ்கெஸ்ட்ரா குழுவையும் நடத்தி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தி வருகிறார். இவரது ஆர்கெஸ்ட்ரா மூலம் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சின்ன வயதில் இருந்தே தனக்கு சமூக சேவையில் அதிக ஆர்வம் இருந்ததாக கூறும் பெஞ்சமின், தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் ஏழைகளுக்காக உதவி வருகிறாராம். தொடர்ந்து உயிர் இருக்கும் வரை இந்த சேவையை செய்வேன் என்றும் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "சமூக சேவை செய்யும் காமெடி நடிகர் பெஞ்சமின்!" ?