Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
அமீர் வாங்கிய 60 லட்ச ரூபாய் சொகுசு கார்

தமிழ் திரையுலகில் எளிமையான டைரக்டர்களில் ஒருவரான அமீர், ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் வாங்கியிருக்கிறார். பொதுவாக சினிமாக்காரர் என்றாலே பந்தாவுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் வெற்றி பெற்ற சினிமாக்காரர் என்றால் சொல்லவும் வேண்டுமா? கார், பங்களா, பார்ட்டி, கூத்து என ஆடம்பர வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பருத்திவீரன் படத்துக்கு கிடைத்த உலக அளவிலான வரவேற்புக்கு பின்னரும், எந்தவித பந்தாவும் இல்லாமல் நகரை வலம் வந்த டைரக்டர் அமீர், இப்போது 60 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் வாங்கியிருப்பது கோடம்பாக்கத்துக்காரர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. யோகி படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்தை அடைந்த அமீர் அடுத்து ஒரு படத்திலும் நாயகனாக நடிக்கப் போகிறார். அதனால்தானோ என்னவோ சொகுசு கார் வாங்கியிருக்கிறார் அமீர்.

கஜினி படம் வெற்றி பெற்று, திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் வசூலை வாரி குவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அப்படத்தின் டைரக்டர் முருகதாஸ் டி.வி.எஸ். 50 வண்டியில் சென்னை நகரை வலம் வந்தார். என் உடலமைப்புக்கு இந்த வண்டியே போதுமானதாக இருக்கிறது என்று கூறி வந்த அவர், அதன் பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகே உறவினர்கள் வற்புறுத்தலால் கார் வாங்கினார் என்பது நினைவு கூறத்தக்கது.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "அமீர் வாங்கிய 60 லட்ச ரூபாய் சொகுசு கார்" ?
No public opinions yet.
Login to say your opinion about "அமீர் வாங்கிய 60 லட்ச ரூபாய் சொகுசு கார்"