Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
சினிமா பிரச்னையும்! பாக்யராஜின் பலூன் தத்துவமும்!!

பலூன் எந்த கலராக இருந்தாலும் உள்ளே இருக்கிற காற்றை பொறுத்துதான் அது உயரமாக பறக்கும். அது மாதிரி விஷயமுள்ள படம்தான் வெற்றி பெறும், என்று நடிகர் பாக்யராஜ் சினிமா பிரச்னைக்கு தீர்வு சொன்னார். கார்த்திக் னெய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் நெல்லு. நாயகனாக சத்யாவும், நாயகியாக பாக்யாஞ்சலியும் அறிமுகமாகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பெப்‌சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் முதல் சி.டி.,யை வெளியிட நடிகர் கம் இயக்குனர் பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சினிமா தொழில் நஷ்டம், படம் ஓடாதது பற்றிய பிரச்னை குறித்து பாக்யராஜ் பேசினார். தனக்கே உரிய பாணியில் புதுமையான தத்துவத்துடன் அவர் பேசியதாவது:

சினிமாவுக்கு இப்ப நிறைய பிரச்னை ஏற்பட்டிருக்கு. அத போக்குறதுக்கு நிறைய பேர் பல அபிப்ராயங்களை சொல்லிக் கொண்டிருக்காங்க. எனது அபிப்ராயம் ஒன்றுதான். அதை அன்னிக்கும் சொன்னேன். இன்னிக்கும் சொல்றேன். பெரிய பட்ஜெட் படமா இருந்தாலும், சிறு பட்ஜெட் படமா இருந்தாலும் கதையில் புது விஷ‌யம் இருக்கணும்., காட்சியில் புதுமை இல்லன்னா வெற்றி கிடைக்காது. எந்த சலுகைளாலும் பயன் இல்லை. பலூன் எந்த கலரா இருந்தாலும் உள்ளே இருக்குற காற்றை வெச்சித்தான் அது உயரமா பறக்கும். அந்த மாதிரிதான் விஷயம் இருந்தாத்தான் படம் வெற்றி பெறும். சினிமாவுக்கு வந்திருக்கிற இந்த பிரச்னைக்கு தீர்வு நல்ல படம் எடுக்குறதுதான்.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் வெற்றி நாயகி அஞ்சலி, நடிகர்கள் மனோஜ், அசோக், கருணாஸ், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "சினிமா பிரச்னையும்! பாக்யராஜின் பலூன் தத்துவமும்!!" ?
No public opinions yet.
Login to say your opinion about "சினிமா பிரச்னையும்! பாக்யராஜின் பலூன் தத்துவமும்!!"