தமிழகத்தில் தி.மு.க. அரசு உருவாக்கியிருக்கும் சட்டமன்ற மேலவையில் குஷ்புவுக்கு ஒரு இடம் கொடுக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மழுப்பலான பதிலையே சொல்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதுமே காங்கிரஸ் கொள்கைகளை பின்பற்றுபவள். இந்திரா காந்தி மீதும், ராஜீவ் மீதும் எனக்கு அதிக பற்று உண்டு. எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது.
ஆனால், அரசியலில் சேருவது பற்றி உறுதியான முடிவு எடுக்கவில்லை. அரசியலில் சேரமாட்டேன் என்றும் சொல்ல மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை முடிவு செய்யவில்லை, என்று கூறியிருக்கிறார்.
"சோனியாவின் தலைமையை ஏற்க யார் முன்வந்தாலும் அவங்களை முழு மனதோடு வரவேற்போம்" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் கூறியிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இதே கருத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். இந்நிலையில் குஷ்பு குறித்த இந்த செய்தி நம்பக்கூடியதாகவே இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் குஷ்பு!" ?