|
 |
 |
|
|
| டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணக்கிறார் பிரகாஷ் ராஜ் |
மனைவி லலிதா குமாரியுடனான விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தனது காதலியும் நடன இயக்குனருமான போனி வர்மாவை திருமணம் செய்யவிருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான வில்லத்தனத்தால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்கள் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் புயலென புகுந்தவர் போனி வர்மா.
பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டரான போனி வர்மா, பிரகாஷ் ராஜூடன் இணைந்து சில படங்களில் பணியாற்றியுள்ளார். அப்போது அவர்களுக்குள் உருவான நட்பு காதலாக மாறியது. இதனால் தனது காதல் மனைவியான லலிதாகுமாரியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்த பிரகாஷ் ராஜ், அதற்காக கோர்ட் படியேறினார். எதிர்பார்த்தபடியே விவாகரத்து கிடைத்தது.
இதையடுத்து காதலி போனி வர்மாவை, பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி வெளியானது. முதலில் இதனை மறுத்து வந்த பிரகாஷ் ராஜ், இப்போது தனது திருமணம் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் கட்டிடக் கலை படித்தவன். எனது வீடு எந்த விதத்தில் அலங்கரிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து, வடிவமைத்து வருகிறேன்.
கன்னடத்தில் நான் இயக்கியுள்ள ‘நானு நன்னா கனசு’ இரு வாரங்களில் திரைக்கு வரும். இது ‘அபியும் நானும்’ படத்தின் ரீமேக். தொடர்ந்து பல மொழிகளில் நடிக்கிறேன். எனது மகள்களுக்காக பல படங்களில் நடிக்கிறேன். அவர்களுக்கு தேவையான அளவுக்கு நான் சம்பாதிக்க விரும்புகிறேன். அதே நேரம், எனது வாழ்க்கை பற்றியும் நான் சில முடிவுகள் எடுக்கும் நேரம் வந்திருக்கிறது. நான் காதலிப்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன், என்று கூறியுள்ளார். |
|
|
|
|
 |
| External Links |
| Not Available |
|
 |
| What people think about "டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணக்கிறார் பிரகாஷ் ராஜ்" ? |
|
|
 |
|
|
|
|
 |
| |