Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
பின்னணி பாடகர் டி.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதி

பிரபல சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் ( 87) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டி.எம்.எஸ்., என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டி.எம்.‌சவுந்தரராஜன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். கடந்த சில நாட்களாக டி.எம்.எஸ்.,க்கு ஞாபக சக்தி அறைந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கூட அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால அவரை சென்னை மந்தைவெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டி.எம்.எஸ்.,ஐ பரிசோதித்த டாக்டர்கள், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையை சேர்ந்த டி.எம்.சவுந்தரராஜன், கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய ராதே என்னை விட்டு போகாதேடீ என்ற பாடல் ஹிட் ஆனதால் அந்த காலத்தின் ஹாட் பாடகர் அந்தஸ்த்துக்கு உயர்ந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு பாடல்களை பாடியிருக்கும் டி.எம்.எஸ்., எப்போது இளைஞரைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பார்.

டி.எம்.எஸ்., வருகிற மார்ச் மாதம் 24ம்தேதி தனது 88வது வயதை எட்டவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "பின்னணி பாடகர் டி.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதி" ?
No public opinions yet.
Login to say your opinion about "பின்னணி பாடகர் டி.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதி"