Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

நடிகை த்ரிஷா தனது பிறந்த நாளையொட்ட 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் த்ரிஷா, அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவிகளை செய்வார்.

ஒவ்வொரு பிறந்த நாளும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு த்ரிஷா தனது பிறந்தநாளையொட்டி திருவேற்காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றார்கள். உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்த த்ரிஷா, பின்னர் அங்குள்ள 400 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதையடுத்து உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஒரு ஆண் குழந்தையையும், மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண் குழந்தையையும் தத்துதெடுத்தார். த்ரிஷாவை பார்த்து அவரது தோழி ஒருவரும் ஒரு குழந்தையை தத்‌தெடுத்தார். சமூக சேவையில் அதிக அக்கறை கொண்ட த்ரிஷாவை உதவும் கரங்கள் நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் வாழ்த்துக்களுடன் பாராட்டையும் தெரிவித்தனர். நாமும் பாராட்டுவோம்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!" ?
No public opinions yet.
Login to say your opinion about "2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!"