Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
‎விஜய் ஆண்டனியின் ஹீரோ அவதாரம்

நான். இது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகராக அறிமுகமாகும் புதிய படத்திற்கான நாமகரணம். ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன், சித்தார்த், ரூபா மஞ்சரி உள்ளிட்ட மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

விதி புரட்டிப் போட்ட ஒரு இளைஞன் புதுவாய்ப்பு தேடி சென்னையை நோக்கி புறப்படுகிறான். அங்கேயும் விதி விளையாடுகிறது. செய்வதறியாது அதை எதிர்கொள்ளும் அவனுக்கு புதிய நட்பு கிடைக்கிறது. அந்த நட்பின் மூலம் புதிய வாழ்க்கையும் கிடைக்கிறது. அதிலும் பல பிரச்னைகள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ்க்கையை நாயகர் வாழத் துடிப்பதும், அது முடிந்ததா? மு‌டியவில்லையா? என்பதும்தான் நான் படத்தின் மொத்த கதையும்.

விஜய் ஆண்டனி கதாநாயகராக நடிப்பதுடன், இப்படத்திற்கு இசையமைத்து, தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் பங்கு பெறுகிறார். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜிவாவின் சீடர்தான் இப்படத்தின் டைரக்டர் ஜீவா சங்கர்.

ஆனந்த தாண்டவம் மூலம் ஒளிப்பதிவாளரான இவர், விஜய் ஆண்டனியின் கல்லூரித் தோழர் என்பது ஹைலைட். படத்தின் நாயகியாக நடிக்கும் ரூபா மஞ்சரி திருதிரு துறுதுறு பட நாயகியாக நடித்தவர் என்பது கூடுதல் தகவல்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "‎விஜய் ஆண்டனியின் ஹீரோ அவதாரம்" ?
No public opinions yet.
Login to say your opinion about "‎விஜய் ஆண்டனியின் ஹீரோ அவதாரம்"