கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள விண்ணைத்தாண்டி வருவாயா படம் விரைவில் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. வித்தியாசமான கதையம்சத்துடன் படங்களை இயக்கி வெற்றி பெற்று வரும் கவுதம் வாசுதேவ் மேனன், இந்த படத்தில் சிம்புவையும், த்ரிஷாவையும் மிக அழகாக காட்டி ரசிக்க வைத்திருந்தார்.
விரல் வித்தைகளை காட்டி சினிமா ரசிகர்களை கடுப்பேற்றி வந்த சிம்பு, இந்த படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை மெருகேற்றியிருக்கிறார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சிம்புவின் நடிப்பு இப்படியென்றால் த்ரிஷாவின் நடிப்பை சொல்லவே வேண்டியதில்லை. ஜெஸ்ஸி என்ற மலையாள கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.
தமிழில் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய கவுதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக் சூட்டிங் விரைவில் தொடங்கும். ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உட்பட அதே டெக்னீஷியன்கள் பணியாற்றுவார்கள். தமிழ் பாடல் மெட்டுகளை இந்தியில் பயன்படுத்தி கொள்வோம்.
இரு பாடல்களை மட்டும் புதிதாக ரகுமான் தர உள்ளார். ஹீரோ வேடத்துக்கு மூன்று நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. ஹீரோயினுக்கான தேர்வும் நடக்கிறது. தலைப்பு இன்னும் முடிவாகவில்லை, என்று கூறியுள்ளார். இந்தி வி.தா.வ. படத்தை இயக்கி முடித்த பின்னரே அஜித்தின் 50வது படத்தை இயக்கவிருக்கறாராம் கவுதம். அநேகமாக டிசம்பரில் அஜித் பட சூட்டிங் தொடங்கும் என்று கவுதம் தெரிவித்துள்ளார்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "இந்தியில் ரீ-மேக் ஆகிறது விண்ணைத்தாண்டி வருவாயா" ?