அஜீத்தின் பிறந்த நாளை, மன்றத்தின் அனுமதி இல்லாமல் யாரும் கொண்டாடக் கூடாது என நடிகர் அஜீத் ரசிகர்கள் தலைமை மன்றம் எச்சரித்துள்ளது.
ரசிகர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுவது அஜீத்தின் வாடிக்கையாகிவிட்டது.
இதோ இன்றும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டிருப்பவர் அஜீத்தின் மேனேஜரும் ரசிகர்கள் மன்ற நிர்வாகியுமான சுரேஷ் சந்திரா.
அந்த அறிக்கையில், "வருகிற மே 1-ம் தேதி அஜீத்குமாரின் பிறந்த நாள். இந்த நாளை முன்கூட்டியே, அதாவது ஏப்ரல் 25-ம் தேதி கொண்டாட சில ரசிகர்கள் முடிவு செய்து, டிவி சானல்களில் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறோம்.
இது தலைமை மன்றத்தின் கட்டளைக்கு எதிரானது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை உடனே நிறுத்தும்படி இந்த அறிக்கை மூலம் அறிவிக்கிறோம். அஜீத் அவர்களுடன் கலந்து பேசி மற்ற விபரங்கள் அறிவிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அஜீத் தற்போது கார் பந்தயங்களில் பங்கேற்க வெளிநாட்டில் உள்ளார். பிறந்த நாள் கொண்டாட சென்னை வருவாரா என்பது சந்தேகமே என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "ரசிகர்களுக்கு அஜீத் மன்றம் எச்சரிக்கை!" ?