Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
ரம்பா திருமண வரவேற்பு...முதல்வர் வாழ்த்து; ரஜினி - கமல் வரவில்லை!

நடிகை ரம்பா - இந்திரகுமார் திருமண வரவேற்பு நேற்று(11-04-2010) மாலை நடந்தது. முதல்வர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

ரம்பாவுடன் படங்களில் நடித்த ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் வரவில்லை.

நடிகை ரம்பாவுக்கும் கனடிய தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாபனுக்கும் கடந்த 8ம் தேதி திருமலையில் திருமணம் நடந்தது.

சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ராணிமெய்யம்மை ஹாலில் திருமண வரவேற்பு நடந்தது.

முதல்வர் கருணாநிதி நேரில் வந்து ரம்பாவுக்கும் இந்திரனுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.

பிரேமலதா விஜயகாந்த், கே.எஸ்.ரவிகுமார் உட்பட வெகு சில திரை நட்சத்திரங்கள் மட்டுமே வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தினர். ரம்பாவின் நாயகர்களாக திரையில் தோன்றிய ரஜினி,கமல், விஜய்,அஜீத் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ரம்பா - இந்திரன் தம்பதியினர் தேனிலவுக்காக நியூஸிலாந்து புறப்படுகின்றனர்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "ரம்பா திருமண வரவேற்பு...முதல்வர் வாழ்த்து; ரஜினி - கமல் வரவில்லை!" ?
No public opinions yet.
Login to say your opinion about "ரம்பா திருமண வரவேற்பு...முதல்வர் வாழ்த்து; ரஜினி - கமல் வரவில்லை!"