Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
5 கி.மீ., துணியில் மகளிர் தின வாழ்த்து : அவினாசிலிங்கம் பல்கலை 'கின்னஸ்' முயற்சி

கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், 5 கி.மீ., நீளமுள்ள வெள்ளைத் துணியில், மகளிர் தின வாழ்த்து எழுதும் சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில், 5 கி.மீ., நீள வெள்ளைத் துணியில் பெண்கள் வாழ்த்து எழுதும் கின்னஸ் சாதனை முயற்சியை, பல்கலை துணைவேந்தர் சரோஜா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

பல்கலை பதிவாளர் கவுரி, ஆசிரியைகள், மாணவியர் ஒவ்வொருவரும் மகளிர் தின வாழ்த்து செய்தி எழுதி கையெழுத்திட்டனர். பல்கலை வளாகத்தில், இந்த கின்னஸ் சாதனை முயற்சி பற்றி அறிந்த கோவை பெண்கள் கையெழுத்திட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் வரை 10,458 மகளிர் கையெழுத்திட்டுள்ளனர். பல பெண்களின் பங்களிப்பை ஈர்க்க இரண்டு நாட்களுக்கு நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலை துணைவேந்தர் சரோஜா கூறுகையில், "கின்னஸ் சாதனைக்கு இதை அனுப்பி வைக்க உள்ளோம்,'' என்றார்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "5 கி.மீ., துணியில் மகளிர் தின வாழ்த்து : அவினாசிலிங்கம் பல்கலை 'கின்னஸ்' முயற்சி" ?
No public opinions yet.
Login to say your opinion about "5 கி.மீ., துணியில் மகளிர் தின வாழ்த்து : அவினாசிலிங்கம் பல்கலை 'கின்னஸ்' முயற்சி"