ஐபிஎல் விவகாரத்தில் லலித் மோடியைக் கொல்ல தாவூத் இப்ராகிம் முடிவு செய்துள்ளதாக மும்பை போலீசார் எச்சரித்துள்ளனர். இதையடுத்து மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது தாவுதின் ஹிட் லிஸ்டில் மோடி இருக்கிறார். அவரை ஐபிஎல் சீசன்-3 போட்டிகள் முடிவதற்குள்ளாகவே மும்பை அல்லது பெங்களூரில் வைத்து தீர்த்துக் கட்ட தாவூத் கும்பல் முயன்றது என்று மும்பை உளவுப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள அலுவலகத்தையும் தாவூத் கும்பல் கண்காணித்து வருவதாகவும், இதனால் மோடி எப்போது மகாராஷ்டிரம் வந்தாலும் அவருக்கு தீவிர பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஐபிஎல் விவகாரத்தில் சசி தரூருக்கும் தாவூத் பெயரி்ல் மிரட்டல் எஸ்எம்எஸ் வந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தாவூதின் டார்கெட் மோடி தான் என்று போலீசார் கூறியுள்ளனர். மோடியை தாவூத் கும்பல் குறி வைக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "லலித் மோடியைக் கொல்ல தாவூத் இப்ராகிம் திட்டம்!" ?