Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
பாலிடெக்னிக் மாணவர்கள் பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர மே 26 முதல் விண்ணப்பம்

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் 2010-2011ம் ஆண்டு பி.இ, பி.டெக் ஆகியவற்றில் 2ம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 26ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், ஓட்டேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புபவர்கள் செயலாளர், 2ம் ஆண்டு பி.இ-பி.டெக். சேர்க்கை 2010, ஏ.சி.சி.இ.டி, காரைக்குடி-630004 என்ற முகவரிக்கு ரூ.300க்கு காரைக்குடியில் பணமாக்கும் வகையில் டிமாண்ட் டிராப் எடுத்து விண்ணப்பங்களைப் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதே முகவரிக்கு ஜூலை 25ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்கான கவுன்சிலிங் ஜூலை முதல் வாரத்தில் காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற கூட்டம்:

இதற்கிடையே பிளஸ்-2 விடைத்தாள் நகல்களைப் பெற மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.

விண்ணப்பம் வாங்கவும் விண்ணப்பிக்கவும் மாணவர்கள் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அலைமோதினர்.

விடைத்தாள் நகலில் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு கூட்டலில் மார்க் விடுபட்டிருந்தால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை 20ம் தேதி வரை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். நகல்கள் 15 நாட்களில் தபாலில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Photos
Coming Soon . . .
External Links
Not Available
What people think about  "பாலிடெக்னிக் மாணவர்கள் பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர மே 26 முதல் விண்ணப்பம்" ?
No public opinions yet.
Login to say your opinion about "பாலிடெக்னிக் மாணவர்கள் பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர மே 26 முதல் விண்ணப்பம்"