நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு வைத்தது தொடர்பாக பாகிஸ்தானில் 7 பேர் சிக்கியுள்ளனர்.
இந்த ஏழு பேருக்கும், நியூயார்க்கில் சிக்கிய பைசல் சஷாத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாகூர், ராவல்பிண்டி, பைசலாபாத், கராச்சி ஆகிய நகரங்களில் இதுவரை 7 பேரை பிடித்துள்ளோம். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
தலிபான்கள் அல்லது அல் கொய்தாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. கைது செய்யப்பட்டுள்ளது மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்றார்.
நியூயார்க்கில் கார் குண்டு வைத்து சிக்கியுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசலுடைய தந்தை பாகிஸ்தான் விமானப்படையில் ஏர்வைஸ் மார்ஷலாக இருந்தவர். பைசலின் பெற்றோர் தற்போது பெஷாவரில் வசித்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
Photos
Coming Soon . . .
External Links
Not Available
What people think about "நியூயார்க் கார் குண்டு- பாக்.கில் 7 பேர் கைது" ?