Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
சென்னை பல்கலையில் பெண்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை

சென்னைப் பல்கலைக் கழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் தொலைநிலைக் கல்வியில் சேரும் பெண்களுக்கு, 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில், 100வது சர்வதேச மகளிர் தின விழா, பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், பல்கலைக் கழக மாணவியர், சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகத்தின் தாய் தனக்கோடி கணபதி அம்மாள் குத்துவிளக்கேற்றி மகளிர் தின விழாவை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:

இந்தியாவில் திருமணமானவர்கள் பெரும்பாலானோர் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கவே விரும்புகின்றனர். ஆண் குழந்தைகளை பெற விரும்புவோர் 33.2 சதவீதமாகவும், பெண் குழந்தைகளை பெற விரும்புவோர் 2.2 சதவீதமாகவும் உள்ளனர். இந்தியாவில், பெண்களின் கல்வி விகிதம் 54.1 சதவீதமாகவும், ஆண்களின் கல்வி விகிதம் 75.9 சதவீதமாகவும் உள்ளது.

நமது நாட்டில் வேலை பார்ப்பவர்களில் 51.6 சதவீதம் ஆண்களும், 22.3 சதவீதம் பெண்களும் உள்ளனர். இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.,) பதவிகளில் 89.6 சதவீதம் ஆண்களும், 10.4 சதவீதம் பெண்களும் உள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 13.9 சதவீத பெண்கள் தாங்கள் கல்வி பயில பொருளாதார ரீதியான வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெண்கள் கல்வி வளர்ச்சி பெற, ‘பெண்கள் படிப்புத்துறை’ என்ற தனித்துறை வரும் கல்வியாண்டு முதல் துவங்கப்பட உள்ளது. இதில், இரண்டு வருட படிப்புகளாக, முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் துவக்கப்பட உள்ளன.

மேலும், தொலைநிலைக் கல்வி முறையில் வரும் கல்வியாண்டு முதல் சேரும் பெண்களுக்கு 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும். இதற்கு சலுகை வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவிடம் ஒப்புதல் பெறப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், ஒவ்வொரு கல்லூரியும், சம்பந்தப்பட்ட பகுதியில் இயங்கும் முதியோர் இல்லங் களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளனர். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

விழாவில், பல்கலைக் கழக பதிவாளர் சரவணன், கர்நாடக இசைக் கலைஞர் சவுமியா, நாட்டுப்புற இசைக் கலைஞர் அனிதா குப்புசாமி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "சென்னை பல்கலையில் பெண்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை" ?
No public opinions yet.
Login to say your opinion about "சென்னை பல்கலையில் பெண்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை"